பந்தை சுவரில் எறிந்தால் அது அடித்தவரிடமே திரும்பி வரும். அதுபோலத் தான் வசைச் சொற்களும். ஒருவரை திட்டினால், ‘‘நிந்தனை சொற்கள் வானத்திற்கு செல்லும். அங்கே வானத்தின் கதவு மூடப்பட்டிருக்கும். பின்பு அலைந்து திரிந்து எவர் திட்டினாரோ அவரிடமே வரும்’’ என்கிறார் நாயகம். நாம் மற்றவரை நிந்தித்தால் இன்னொருவர் நம்மை நிந்திப்பார். எனவே நல்லதை மட்டுமே பேசுவோம்.