குடும்பத்தில் சொத்துக்காக சண்டை நடக்கிறது. பங்காளிகளுக்குள் வயல் வரப்பு தகராறு நடக்காத ஊரே இல்லை. அண்டை வீட்டார் ஒருவருக்கொருவர், ‘‘உன் வீட்டு சாக்கடை என் வீட்டுப் பக்கம் வரலாமா’’ ஏசிக் கொள்கின்றனர். ஆனால் வாழ்வின் கடைசியில் வெறும் ஆறடி நிலம் மட்டுமே மனிதனுக்குத் தேவைப்படும். சொத்து தகராறு, பிரச்னையின்றி நிம்மதியாக வாழ வேண்டுமானால் விட்டுக்கொடுக்கும் குணம் வேண்டும். . ‘‘யாராவது அநியாயமாக மற்றவரின் ஒரு சாண் நிலத்தை அபகரித்தால் மறுமை நாளில் அவர் பூமிக்கடியில் அழுத்தப்படுவார்’’