பள்ளிவாசலில் பாங்கு சொல்பவர்களை ‘முஅத்தின்’ என்பார்கள். பாங்கு சொல்பவரின் கழுத்து மறுமை நாளில் மற்றவர்களை விட அதிகமாக நீண்டிருக்கும். இதனால் என்ன நன்மை என யோசிக்கிறீர்களா? சராசரி உயரமுள்ளவர்கள் நிற்கும் ஒரு கூட்டத்தில், உயரமானவர் நின்றால் எதிரே இருப்பவர் பார்வையில் அவர் உடனடியாக கண்ணில் படுவார். அதைப் போல இறைவனின் கண்ணில் முதலில் தெரிவார்கள் என்பது பொருள். இதன் மூலம் எல்லா நன்மைகளும் தானாக வரும்.