சிலர் இயல்பிலேயே உடல் வலிமையற்றவராக இருப்பதுண்டு. சிலருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும். இவர்களை ஆண்மையற்றவர் என்றோ, மலட்டுத்தன்மை என்றோ குறிப்பிடக் கூடாது. உடற்குறை உள்ள பெண்களின் மனதை காயப்படுத்தக் கூடாது. ஆதரவற்ற பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இவர்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. இவர்களின் சம்மதம் பெற்று திருமணம் செய்யலாம் அல்லது சகோதர உணர்வுடன் தேவையான நேரத்தில் உதவலாம். ‘‘அனாதைப்பெண்களின் உரிமைகளைப் பறிப்போர் அழிவுக்கு ஆளாவர்’’.