குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். குறிப்பாக சகோதரர்கள் சொத்துச் சண்டையால் பகையை வளர்க்கின்றனர். கணவன், மனைவிக்குள் யார் பெரியவர் என கருத்து வேறுபாடு கொள்கின்றனர். திருமணமான பிறகு பெற்றோரை பாரமாக நினைத்து ஒதுக்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர். சிலர் ஓரடி நிலத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். ‘‘ குடும்பத்தில் ஒற்றுமையைக் கடைபிடியுங்கள். இதை மீறுபவன் ஓநாயின் வலையில் சிக்கிய ஆட்டுக்கு சமமானவன். கூட்டத்தை விட்டுப் பிரிந்து வாழ்பவனை ைஷத்தான் தன் பக்கம் இழுத்துக் கெடுப்பான்’’