* நீங்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்திப்பீர். * செய்த நன்மைகளை விட உங்களால் நிகழ்ந்த பாவங்களை சிந்தியுங்கள் * மற்றவரின் குற்றங்களை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். * தண்ணீரில் உப்பு கரைவது போல பாவங்கள் நற்குணத்தால் கரையும். * அன்பு செலுத்தாதவன் அன்பை பெறுவதற்கு தகுதியற்றவன். * தீய செயலில் இருந்து விலகுவதே தர்மம் தான். * உங்களை நம்பிச் சொல்லும் செய்தியை அடைக்கலப் பொருள் போல் காப்பாற்றுங்கள். – பொன்மொழிகள்