இங்கிலாந்தைச் சேர்ந்த ரொனால்ப் சர்ச்சில் கூட்டம் ஒன்றில் பங்கேற்க ஸ்காட்லாந்திற்குச் சென்றார். ரயில் நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் ஊருக்கு புறப்பட்டார். மழைக்காலம் என்பதால் சேற்றில் வண்டி சிக்கிக் கொண்டது. அப்போது பக்கத்து குதிரை பண்ணையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்தான். குதிரைகளின் உதவியுடன் சேற்றில் இருந்து வண்டியை வெளியேற்றினான். அவனுக்கு சர்ச்சில் வெகுமதி அளிக்க இளைஞன் மறுத்தான். ‘‘ஐயா.. மேற்படிப்புக்கு பணம் இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவுங்கள்’’ என்றான். இளைஞனை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததோடு படிப்புச் செலவை முழுமையாக ஏற்றார் சர்ச்சில். அந்த இளைஞனே பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். கைமாறு கருதாமல் உதவிய சர்ச்சிலுக்கு மட்டுமின்றி அவரது சந்ததியையும் ஆசீர்வதித்தார் ஆண்டவர். ஆம்! அவரது மகனே இங்கிலாந்தின் பிரதமராகத் திகழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சில்.