ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்எஸ் மங்கலம் அருகே இந்திரா நகர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. நேற்று மண்டல பூஜை விழா நடைபெற்றது.சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகசாலை பூஜை செய்து, மூலவருக்கு கும்ப நீர் ஊற்றி மண்டல பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.