தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசிமஹா சிவராத்திரி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. அடைக்கப்பட்ட குச்சு வீட்டின் கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பிப்.19ல் மாசி மஹா சிவராத்திரிக்காகமுகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. மார்ச் 11 முதல் திருவிழா துவங்கி நேற்று (மார்ச் 18) வரை 8 நாட்கள் நடந்தது. திருவிழாவில் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.நேற்று ராஜகம்பளத்தார் தேவராட்டத்துடன் பள்ளயம் கோயில் வந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிப்பட்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ்பாண்டியன், கனகராஜ் பாண்டியன், செயல்அலுவலர் சந்திரசேகரன், உபயதாரர்கள் செய்தனர்.