கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2021 11:03
கடலூர்: மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு, பங்குனி உத்திர திருவிழாக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெறும். தொடர்ந்து வரும் 27ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 28ம் தேதி பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற விருக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவில் அதிகாலையில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.