பதிவு செய்த நாள்
19
மார்
2021
12:03
பாகூர்: பிள்ளையார்குப்பம் வள்ளி தேவசேனா சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், 61ம் ஆண்டு 108 காவடி பூஜை மற்றும் செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி மதியம் ஒரு மணியளவில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றம் நடந் தது. இன்று (19ம் தேதி) இரவு விநாயகர் பூஜை, நாளை (20ம் தேதி) இரவு சக்திவேல் பூஜை, 21ம் தேதி வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிககு விபூதி காப்பு நடக்கிறது.22ம் தேதி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், 23ம் தேதி வலம்புரிசங்கு அபிஷேகம், 24ம் தேதி சிவலிங்க பூஜை, தேவாரம், திருவாசகம் ஓதுதல், 25ம் தேதி இரவு 7.00 மணிக்கு 108 சங்காபிேஷகம் நடக்கிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 27ம் தேதி 108 காவடி மற்றும் செடல் திருவிழா, 28ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 29ம் தேதி இடும்பன், கடம்பன் பூஜை நடக்கிறது.