திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே அங்காளம்மன் கோவலில் தேர் திருவிழா நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலக்கம்பட்டு அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 ந் தேதி சந்தனகாப்பு அலங்காரத்துடன் முதல் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 9ம் நாள் திருவிழாவையோட்டி நேற்று மதியம் தேர்ரோட்டம் நடந்தது. இதில் செங்கல்வராயன் சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். மேலும் துலக்கம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். மேலும் நேர்த்திகடனாக நெல், புளியங்களாய், காய்கறி மற்றும் தானிய வகைகள் சூறை விடப்பட்டது.