பதிவு செய்த நாள்
22
மார்
2021
10:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று, பெருமாள் யாளி வாகனத்தில், வீதியுலா நடந்தது.
திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, தேகளீ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் வானவேடிக்கையுடன் பெருமாள் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 24ம் தேதி இரவு பெருமாள் தங்கக் கருட சேவையில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 26ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், 28 ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.