பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 6 மணிக்கு மேல் அம்மன் பூதகி வாகனத்தில் சூலாயுதம் ஏந்தி அருள் பாலித்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஒயிலாட்டம், சிலம்பம் ஆடி வந்தனர். மேலும் குழந்தைகள் பல்வேறு சுவாமி மற்றும் தலைவர்களின் வேடமிட்டு சென்றனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். நேற்று காலை அம்மனுக்கு சக்திவேல் ஏந்தி பட்டு பல்லக்கில் வீதி வலம் வந்தார். நாளை(மார்ச் 23) மாலை 4:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில், வண்டி மாகாளி உற்சவ நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.