ராஜபாளையம் : ராஜபாளையம் புதுப்பாளையம் கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.மார்ச் 14- ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10 நாள் நடைபெறும் பிரம்மோற்ஸவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரம் மேளம் முழங்க சீதா தேவி சமேத ராமர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. திருமஞ்சன பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.