* சூரியனுக்கு ‘அர்க்கன்’ என்னும் பெயருண்டு. ‘அர்க்கம்’ என்றால் ‘எருக்கு’. சூரியனார் கோவிலில் தல விருட்சமாக எருக்கு உள்ளது. * அம்பிகையைக் குறித்த ‘சவுந்தர்ய லஹரி’ என்னும் ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் ‘சசி - மிஹிர - வக்ஷோருஹயுகம்’ எனக் குறிப்பிடுகிறார். சூரியன், சந்திரனின் மூலமாக அம்பிகையே உலக உயிர்களுக்கு பாலுாட்டுகிறாள் என்பது இதன் பொருள். * சூரியனே ஒளிக்கதிரில் இருந்து தான் தாவரங்கள் தங்களுக்குரிய சத்தைப் பெற்று சேமிக்கின்றன. இலை, காய், பழம் என எதுவாக இருந்தாலும் சூரிய ஒளிக்கற்றை மூலமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. * சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. சூரியனுக்கே ‘ஞாயிறு’ எனப் பெயருண்டு. ‘ஞா’ என்றால் ‘நடுவில் தொங்குகிற’. ‘யிறு’ என்றால் ‘இறுகப் பற்றிக் கொண்டுள்ள’. நடுவில் இருக்கும் சூரியன் மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது. * ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள், ஆரோக்கியத்திற்கு உரியவர் சூரியன். அதிகாலையில் எழுந்து, சூரிய வழிபாடு செய்பவர்கள் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருப்பர்.*“அதிகாலையில் சூரியனைப் பார்க்காதவரின், வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே,” என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.