புதுச்சேரி; பெரியக்காலாப்பட்டு பாலமுருகன் கோவில் 49வது ஆண்டு பங்குனி உத்திர விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி அடுத்த பெரியக்காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் 49வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 18ம் தேதி ஊரணி பொங்கலுடன் துவங்கியது. பின், 19ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சுவாமிக்கு தினமும் அபிேஷக ஆராதனை கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்ச வம் நாளை 28ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கனரக வாகனங்களை இழுத்து நேர்த்திகடன் செலுத்த உள்ளனர். மதியம் 12 மணிக்கு பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு தேர் உற்சவம் நடக்கிறது. மறுநாள் 29ம் தேதி இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம், 30ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.