காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 18 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தினமும் பால்காவடி, பன்னீர்காவடி, விபூதிக் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். தினமும் வெள்ளி கேடகம், ருத்ராட்ச கேடகம் மற்றும் தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளினர். பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், குன்றக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 11 மணிக்கு உத்திரம் தீர்த்தவிழாவும், இரவு 8 மணிக்கு மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார்.