பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் பங்குனி விழாவையொட்டி இன்று இரவு மின் தீப அலங்கார தேரோட்டம் நடக்கிறது. காலை தொடங்கி மாலை 6:00 மணிவரை அக்னிச்சட்டி ஊர்வலமும், இரவு 8:00 மணிக்கு மின் தீப தேரில் நான்கு மாடவீதிகளில் அம்மன் வலம் வருவார். தொடர்ந்து நாளை அதிகாலை பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அம்மன் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார். நேற்றிரவு அம்மன் குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.