திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2021 02:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. கடந்த மார்ச் 20 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் உற்ஸவர் கல்யாண ஜெகந்நாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு 52 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் உற்ஸவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் வீற்றிருந்தார். திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து 12:30 மணி அளவில் தனது இருப்பு நிலையை வந்தடைந்தது. கோவிந்தா கோஷம் முழங்க தேரை இழுத்தனர். தேர் இழுத்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, கனிகள் வீசப்பட்டது.