பதிவு செய்த நாள்
29
மார்
2021
03:03
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பங்குனி உத்திரத்தைாயொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது.
இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், பங்குனி உத்திரம் என்பதாலும், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பொதுவழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இதே போல், திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், உற்சவர் சிவகாமி சுந்தேரஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.