உற்சவர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள்மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சென்னை , மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை , திருக்கூத்தபெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது. மாலை , 6:30 மணிக்கு, புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருமண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, கைலாய ஊர்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் பங்குனி விழா நிறைவு பெற்றது. இன்று பந்தம் பறி விழா, நாளை விடையாற்றி விழா நடக்கிறது.