ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நடந்த ருத்ர யாக பூஜையில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் நேற்று மாலை 5:38 மணிக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் குப்புராமு, பா.ஜ., மாவட்டத் தலைவர் முரளிதரன் சால்வை கொடுத்து வரவேற்றனர். பின் ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 6 :50 மணிக்கு உ.பி., முதல்வர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். கோயிலில் சுவாமி சன்னதி அருகில் நடந்த மகா ருத்ர பூஜையில் உ.பி., முதல்வர் 25 நிமிடங்கள் பங்கேற்று தரிசனம் செய்தார். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். முதல்வர் வருகை யொட்டி ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை தேசிய நெடுஞ்சாலை, கோயில் ரத வீதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.