அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூசாரிகள் மற்றும் மிராசுதார் ஆகியோர் குண்டம் இறங்கினர். தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று 31 ம் தேதி காலை 7 : 30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 7 : 00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று. மூன்றாம் தேதி குண்டம் திருவிழா நிறைவு பெறுகின்றது.