மதுரை: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
மதுரை, தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்து வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 11ம் தேதி பூப்பல்லக்கு, 12ம் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.