அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று பாலையம்பட்டி விரிவாக்க பகுதியில் இருக்கும் நெசவாளர் காலனி அம்மன் வீதி உலா வந்தார். அங்குள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு ராமலிங்க நகர் ஆர்ச் வழியாக சென்றது. பக்தர்களுக்கு கொழுக்கட்டைவழங்கப்பட்டது. பின்னர் அம்மன் பழைய நெசவாளர் காலனியில் வீதி உலா சென்றது.