பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
10:04
திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர். அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான உகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.