பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
03:04
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்; பகல் 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.