Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... துலாம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் துலாம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை)
கன்னி: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
22:35

உத்திரம்,2,3,4 ம் பாதம்: சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள்

பொதுவாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீரும். பல மாதங்கள் தட்டிப்போன குலதெய்வ வழிபாட்டினை இந்த ஆண்டு நல்லபடியாக முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண் வம்பு பிரச்னைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் குடும்பத்தினர்களின் வெற்றியில் உங்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தைவிடவும் உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை உணர்வீர்கள். உண்மையான உழைப்பிற்கு எந்த வகையிலும் இடையூறு நேராது. அயராத உழைப்பினால் அசாத்தியமான வெற்றியைக் காண்பீர்கள்.. குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். ஆயினும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

நிதி:
ஒரு சிலர் தந்தை வழி சொத்துக்களை விற்று, அதன் மூலம் வரும் தன லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவுசெய்ய முயற்சிப்பீர்கள். அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெல்வீர்கள்.. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணமாய் இருந்தது வேறு வகையில் சேமிப்பாய் மாறும் என்பதால் அவற்றை செலவாக நினைக்க வேண்டாம். எந்தக் காலத்திலோ உங்கள் முன்னோர் வைத்துவிட்டுப்போன செல்வங்கள் உங்களுக்கு உதவும். ஷேர் போன்றவற்றில் நீங்கள் செய்த முதலீடுகள் இப்போது நல்ல லாபம் அளிக்கும்.

குடும்பம்:
குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்து வரும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். நண்பர்களின் துணையோடு எவராலும் எளிதாகச் செய்ய முடியாத ஒரு சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள். பேசுவதற்குத் தயங்கும் உங்களுக்கு இவ்வருடத்தில் முறையாய்ப் பேசும் கலை கைவரப்பெறுவீர்கள். தன்னம்பிக்கை கூடுவதால் குடும்பத்தில் ஏற்படும் சிறு பூசல்களை ஒரே குரலில் அடக்கி வெற்றி காண்பீர்கள். இதன் காரணமாக உங்கள் மீது உள்ள மதிப்பு கூடும். குழந்தைகள் உங்களை பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்து சந்தோஷப்படுவார்கள்.

கல்வி:
நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.ஞாபக மறதியினால் அவதிப்பட்ட நிலை மாறி மனதில் இறுத்தும் கலையைக் கற்பீர்கள்.  வேகமாக எழுதக் கற்றுக்கொண்டு விடுவீர்கள், நீங்கள் புதிதாகத் தேர்ந்தெடுத்த யுக்தி மூலம் பாடங்கள் உங்கள் மனதில் பதிந்து விடும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஏரோநாட்டிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங், ஃபேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள்:
பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஒருவேளை யாரேனும் தங்கள் குடும்ப நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று  தெரிந்தாலும்கூடப் பெரிதாக கவலைப்பட வேண்டாம்.  விட்டுக்கொடுத்தலின் மூலம் நற்பெயரை அடைவீர்கள்.
உடல் நிலை:
உடல்நிலை நன்றாகவே இருக்கும். உங்களின் தினசரி பழக்க வழக்கத்தாலும், உணர்ச்சிவசப்படாமல் உங்களைக் காத்துக் கொள்வதாலும் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். அவ்வப்போது மருத்துவ சோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேலும் அதிக கவனமாக இருக்கலாம்.

தொழில்/பணி:
உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நீங்கள் கேட்ட இடத்தில் கேட்ட சம்பளத்துக்கு வேலை கிடைக்கும். . பணியிடத்தில் உங்களுக்கு வந்த துயரங்களை திறமையாக சமாளிக்கவும், வருங்கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் தேவைப்படும் திறமை கைவரப்பெறுவீர்கள்.இதற்கு அனுபவசாலிகளின் ஆலோசனையும் துணை நிற்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாக வீசும். சற்று சந்தேகத்துடன் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும். பங்கு சந்தையில் முன்னேற்றம் உண்டு

பரிகாரம்:
திருமாலை வழிபட்டால் சிரமத்திலிருந்து மீளலாம்.
பாடல்:
நிலவின் ஒளி எனப்பொங்கும்
திருமுகன் வெண் துகிலோன்
கரங்கள் நான்கால் காக்கும்
விஷ்ணு பொற்பாதம் போற்றி.

அஸ்தம்: நன்மை அதிகம் உண்டு

பொதுவாக சற்று நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிட்டினாலும், ராசி அதிபதி புதனும், நட்சத்திர அதிபதி சந்திரனும், அடிக்கடி நன்மை தரும் அமைப்புக்கு வருவார்கள் என்பதால், நன்மை அதிகமாக உண்டு. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் போக்கில் சற்ற நிதானப்போக்கு இருக்கும். புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் நீங்கள் ஆன்மிக ஈடுபாடு கொண்டாலும் வியப்பதற்கில்லை.

நிதி:
அருமையாக இருக்கும். மேமாதத்துக்குப் பிறகு சற்று முயன்று சம்பாதிக்க வேண்டியிருந்தாலும், அறிவாற்றலுடன் முதலீடுகள் செய்வீர்கள். உடனடிப் பலன் சாதாரணமாகத் தோன்றினாலும் சிறிதுகாலத்தில் அபரிமித நன்மைகள் உண்டு. லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து இருக்கும். இந்த வருடம் குருவும் சனியும் இணைந்து பதினொன்றாம் வீட்டைப் பார்ப்பதால் வருட ஆரம்பத்திலிஇருந்தே நிதியில் நிரந்தரத்தன்மை இருக்கும். ஒன்பதில் ராகு. வெளிநாட்டு ஆதாயம் கிட்டும். நீங்கள் பல வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பும் உள்ளது. பாட்டன் வழிச் சொத்து வரும். பலவித வருமானங்கள் வருடக்கடைசியில் கிடைக்கும். பணப் பை நிரம்பும்.

குடும்பம்: .  
பெரும்பாலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சலசலப்புகள் இருந்தாலும் உங்கள் ஜாலியான போக்கால் சரிக்கட்டிவிடுவீர்கள். மகன், மகளின் எதிர்காலத்திற்கான நிரந்தர ஏற்பாடு ஒன்று செய்வீர்கள். தந்தையுடனான உறவு உங்கள் போக்கிற்கேற்ப இருக்கும். குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். குடும்ப உறவுகள் ஆரம்ப மாதங்களில் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு அனுசரிக்க வேண்டியிருக்கும். மகிழ்ச்சியுடன் சுற்றுலாக்கள் செல்வீர்கள். குடும்பத்தில் உள்ள எதிர்பாலினத்தினர் மதிப்பர். உங்கள் சாதனைகளை  அவர்கள் பாராட்டுவர்

கல்வி:
வெற்றி பெற மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சோம்பலைக் கைவிட வேண்டும். மனது வைத்தால் மலையை வளைக்கும்  வல்லமை கொண்ட நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள். பள்ளி மாணவர்கள் கவனமுடன் இருந்தால் பிரச்னைகள் வராது. படிப்பது மற்றும் எழுவதில் சோம்பல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் ஜெயிப்பீர்கள்.
பெண்கள்: எதையும் எதிர் கொண்டு வெல்லும் திறம் வரும். பணியில் எதிர்பாலினத்தாரால் வரும் சவாலைச் சமாளித்து வியக்க வைப்பீர்கள். வழக்கத்தைவிடக் கடுமையாக உழைக்கும்  ஆர்வமும் தெம்பும் வரும். கவர்ச்சி அம்சமும் அழகுணர்ச்சியும் கலையார்வமும் அதிகரிக்கும்.

உடல் நிலை:
குரு உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் குரு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அஜீரணக் கோளாறு ஏற்படக்கூடும். ஆனால் எதுவும் தற்காலிகப் பிரச்னையே. விரைவில் குணம் காண்பீர்கள்.

தொழில்/பணி
வருட ஆரம்பத்தில் சிறப்பாக இருக்கும். பிறகு சிறு சவால்களை சந்திக்க நேரும். சனி காரணமாக உங்கள் புத்திசாலித்தனத்தில் சிறிது மந்த நிலை ஏற்படும். வேலை மாற நினைப்பீர்கள். மாறுவது பற்றி அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். உணர்ச்சிப் பூர்வமாக செயல்படாதீர்கள். பெரும்பாலும் குரு பார்வை இருப்பதால் எது செய்தாலும் வெல்வீர்கள். வாகனங்கள், கருப்பு நிறப்பொருட்கள், தங்கம், போன்றவை குறித்த வியாபாரங்கள் செய்பவர்கள் உழைத்து லாபம் காண்பீர்கள். கல்வி சார்ந்த தொழில் மற்றும் பணி செய்பவர்கள் நன்மை பெறுவீர்கள்.

பரிகாரம்:
புதன் கிழமைகளில் திருமாலை வணங்கிப் பாசுரங்கள் சொல்லலாம்
பாடல்:
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.

சித்திரை, 1,2 ம் பாதம்: பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய தனித்துவம் வெளிப்படும் வகையில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவீர்கள்.  மென்மையும் கருணையும் அதிகரிக்கும். வழக்கமான புத்திசாலித்தனம் காரணமாகச் சிறப்படைவீர்கள்.  

நிதி:
கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் இருந்தால் ஏமாற்றப்படும் வாய்ப்பு இல்லை. கவனத்துடன் இருக்கவும். அதே போல அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் போன்றவை வந்து சேரும். பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். குருபார்வை காரணமாக நிமி தேடி வரும்.

குடும்பம்:

உயர்கல்வி, பணி போன்ற நற்காரணங்களின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் செலவுகள் செய்வார்கள். முன்பிருந்த சின்னசின்ன மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்துடன் கோயிலுக்குப் போவீர்கள்.


கல்வி:
கல்வியில் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறப்போகிறீர்கள். குருபார்வை உதவும்.  ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துபவர்கள் அற்புதப் பலன்களை அடைவர்.  நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பரஸ்பரம் உதவுவீர்கள்.

பெண்கள்:
காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் சாமர்த்தியமாக நழுவுவதுடன் தீயவர்களை உணரச் செய்து தண்டிப்பீர்கள்.

உடல் நிலை:
வழக்கம்போலச் சின்னஞ்சிறு உபாதைகள் இருந்தாலும் உடனுக்குடன் அது உங்களைவிட்டுக்கிளம்பிவிடும். உங்கள் ராசிக்காரர்களுக்கு எப்போதும் ஆரோக்யம் சற்று அதிகம்.இந்த ஆண்டு அது மிக அதிகம்.
தொழில்/பணி:
தொழிலில் பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாள்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள் என்பதால் கவலை இல்லை. பங்குதாரர்களால் நன்மை வரும். ரியல் எஸ்டேட், கமிசன், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள்..

பரிகாரம்:
லலிதாம்பிகையைச் செவ்வாய்க்கிழமைகளில் துதித்தால் சிரமங்கள் நீங்கும்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை) »
temple
அசுவினி: பண்புடனும், அன்புடனும் பழகும் நீங்கள் இந்த புத்தாண்டில் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4 பாதம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளித்து காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3,4 பாதம் " தங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடைய உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : எடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்களான உங்களுக்கு இந்த புத்தாண்டில் ... மேலும்
 
temple
மகம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் தைரியம் அதிகரிக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.