Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... விருச்சிகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் விருச்சிகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
துலாம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
எழுத்தின் அளவு:
துலாம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
11:04

சித்திரை, 3,4 ம் பாதம்: சம்பள உயர்வு வரும்

பொதுவாக வருமானம் உயரும்.. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். சகோதர உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

நிதி:
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். நிதி சம்பந்தமான வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். குறைந்த சிரமத்துடன் நிறைந்த வருமானத்துக்கு நேர்மையான யுக்திகளைக் கண்டறிவீர்கள். உங்கள் உழைப்பைப் பார்த்து நிர்வாகம் வழக்கத்தைவிட நல்ல சம்பள உயர்வு தரும். சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு உயரும்.

குடும்பம்:
மகளின்/ மகன் கல்யாணத்திற்காக வரன் தேடியவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன்/ மணமகள் அமைவார். குடும்பத்தினருக்குப் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.  சகோதரிக்கு நல்ல வேலை அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். உறவினருடன் பழைய ‘சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்

கல்வி:
தீய பழக்கம் இல்லாதவரையில் வெல்வீர்கள். கல்வி தவிரவும் கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து, பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்து நீங்களும் மகிழ்வீர்கள்.

பெண்கள்:
உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தோழிகளுக்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடந்து உங்களுக்கு மகிழ்ச்சி தரும். வெளிநாட்டில் உள்ள உறவினரிடமிருந்த சந்தோஷச் செய்திகள் வரும்.  தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

உடல் நிலை:
தீய பழக்கங்கம் இருப்போர் அதைக் கைவிட்டு ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவைச் சாப்பிடுவோருக்குத் தொல்லை இல்லை. சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

தொழில்/பணி:
பணி முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள்.. கனமான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றுவீர்கள்.

பரிகாரம்:
சனிக்கிழமைகளில் விநாயகர் துதிகளைச் சொல்லுங்கள்.

சுவாதி: குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.

பொதுவாக அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.திருமணத்துக்குக் காத்திருந்தவர்களுக்குக் கண்ணுக்கு அழகான வாழ்க்கைத் துணை வந்தமைவார்.

நிதி:
உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்,பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். சேமிப்பு தக்க  சமயத்தில் பயன்படும். செலவு ஏற்பட்டாலும் அது நல்ல செலவாகவே இருக்கும். ஒரே வகையான சேமிப்பாக இல்லாமல் பல வகைகளில் சேமிப்பீர்கள்.

குடும்பம்:
வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியல் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மகனுக்கு/ மகளுக்கு நல்ல குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும்.

கல்வி:
ஏற்கனவே தட்டிப்போயிருந்த வெளிநாட்டு வாய்ப்பு, சுலபமாகக் கிடைக்கும். கணவர் அல்லது மனைவி உங்கள் கல்விக்கு மிக உதவுவார். ஒரே சமயத்தில் இரண்டு வகை விஷயங்களை எடுத்துக் கற்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியரின் பாராட்டுப் பெறுவீர்கள்.

பெண்கள்:
தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மன நிலையில் குறுகல் இல்லாத ஆரோக்யமான போக்கு இருக்கும். பக்தி அதிகரித்து நிம்மதி கூடும்.

உடல் நிலை:
பொதுவாக ஆரோக்யம் நல்லமுறையில் இருக்கும். சருமம் சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராதபடி முன்கூட்டியே பாதுகாப்பாக இருங்கள். உணவு விஷமாகாதபடி கவனமாக உண்ணுங்கள். பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளது.   

தொழில்/பணி:
உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டாவதோடு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணி இடம் மாற்றம் உள்ளிட்ட இடமாற்றங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.இதுவரை வேலையில் இருந்த சுணக்கம் நீங்கிப் புத்துணர்ச்சி பிறக்கும். சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்.

பரிகாரம்:
தன்வந்திரியைத் துதியுங்கள்.

விசாகம் 1,2,3 ம் பாதம்: வெற்றி காண்பீர்கள்.

சென்ற ஆண்டில் செய்ய நினைத்து தடைபட்ட காரியங்களை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே செய்து முடித்துவிட வேண்டும் என்ற உற்சாகத்தில் செயல்களில் அசாத்திய வேகம் இருக்கும். எதையும் தள்ளிப்போடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

நிதி:
சம்பாதிக்கவும் சேமிக்கவும் சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வருமானங்கள் அதிகரிக்கும். இந்த வருடம் நிச்சயம் பற்றாக்குறை ஏற்படாது. யாருடனும் உங்களை ஒப்பிட்டுத் தயங்கி நிற்காமல் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நிதியைப்  பெருக்குவீர்கள். நேர்மையற்ற வழிகளைத் தவிர்க்க வேண்டும்.  

குடும்பம்:
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைவர். சுப நிகழ்வுகள் நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

கல்வி:
சக மாணவர்களுடன் மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. சில நல்ல நண்பர்களின் உதவியால் மேற்படிப்பு பற்றிப் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். எடுத்த முயற்சிகள் சற்றுத் தாமதமானாலும் நற்பலன் அளிக்கும்.

பெண்கள்:
எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சற்று படபடப்பு அதிகம் இருந்தாலும் தைரியலக்ஷ்மி துணை இருப்பதால் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்..வீட்டிலும் பணியிலும் பாராட்டு வரும்.  

உடல் நிலை:
தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வதில் நீங்கள் இந்த ஆண்டு சற்று அதிகக் கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்ய விஷயத்தில் ஒரு சிறிதளவு கவனக்குறைவும் கூடாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

தொழில்/பணி:
பணியில் இருப்பவர்களின்  செயல்களில் மேலதிகாரிகள் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது கவனமாக இருந்தால் கவலையில்லை. புது வாய்ப்புகளை யோசித்து       அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் ஏற்கலாம். இடமாற்றம் இருக்கும்.

பரிகாரம்:
ஏகாதசி நாட்களில் விரதமிருந்து திருமாலை வழிபடுங்கள்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar