திருக்கண்ணாடி அறையில் வரதராஜபெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 09:04
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை முன்னிட்டு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் திருமஞ்சனம் நடந்தது. 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, 7:30 மணிக்கு திருக் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.