Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: சித்திரை மாத ராசிபலன் மிதுனம்: சித்திரை மாத ராசிபலன் மிதுனம்: சித்திரை மாத ராசிபலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷபம்: சித்திரை மாத ராசிபலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம்: சித்திரை மாத ராசிபலன்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
11:04


க்ருத்திகை - 2, 3, 4ம் பாதம்:
எந்த ஒரு வேலையையும் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் க்ருத்திகை - 2, 3, 4 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.  பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையற்ற செலவு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்:  ஆதிபராசக்தி
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 30, மே 01
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 15, 16

ரோகினி:
வேகத்தை விட்டு விவேகமாக செயல்பட்டு வெற்றி காணும் ரோகினி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் . மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு விவேகமாக செயல் படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு  எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம்.  அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்:  அனுமன்
சந்திராஷ்டமம்: மே 01, 02
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 16, 17

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:
நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிக்கும் மிருகசீரிஷம் - 1, 2 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரவு கூடும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்களுக்கு சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு போட்டிகள் குறை யும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:  ஐயப்பன்
சந்திராஷ்டமம்: மே 02, 03
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 17, 18

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar