பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 01:04
பிள்ளையார்பட்டி : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை அங்குச மற்றும் அஸ்திர தேவர்களுக்கும் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.இங்கு, விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு ஆகிய இரு நாட்களில் மட்டுமே தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கும். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறந்தனர். தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்துபக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.மூலவர் தங்கக் கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினர். காலை 9:00 மணிக்கு மருதீஸ்வரர் மண்டபத்தில் இருந்து அங்குச மற்றும் அஸ்திர தேவர்கள் புறப்பாடாகி கோயில் குளத்தின் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர்.
கோயில் தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தர குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.தொடர்ந்து அஸ்திர மற்றும் அங்குச தேவர்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்த பின், ஸ்ரீதர் குருக்கள் தீர்த்தவாரி உற்ஸவத்தை நடத்தினார். சுவாமிகள் கோயிலில் எழுந்தருளினர். மாலையில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தனர். உற்சவ விநாயகர் பிரகார வலம் வந்தார்.தெர்மல் பரிசோதனை, கிருமிநாசினி தெளித்தும், முககவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பின்னரே பக்தர்களை அனுமதித்தனர். இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டன. விழா ஏற்பாட்டை அறங்காவலர்கள் காரைக்குடி பி.எஸ்.ஆர்.எம்.ஏ.,ராமசாமி, வலையபட்டி எம்.நாகப்பன் செய்திருந்தனர்.