பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
04:04
திருக்கோவிலூர்: தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் திரிவிக்கிரமன் விஸ்வரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, 10:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் கண்ணாடி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, ராமர் சன்னதியில் சீத்தா சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் வைர அங்கி சேவையில் அருள்பாலித்தார். ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் பலரும் கொண்டனர். கிழக்கு வீதி, ஆஞ்சநேயர் கோவிலில், காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம், முத்தங்கி அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு, அர்ச்சனை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.