பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
04:04
தேனி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேனி மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனுர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில், வீரப்ப அய்யனார் மலைக் கோயில், வரதராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடந்தது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில், பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வரதராஜப்பெருமாள் கோயில், காளியம்மன் கோயில்,கவுமாரியம்மன், திரவுபதிஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன், தாமரைக்குளம் மலைமேல் வெங்கிடாஜலபதி, லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
போடி: தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில் வழக்கம் போல முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. சுனைநீரில் பக்தர்கள் நீராடி சாமி தரிசித்தனர். தக்கார் அண்ணாத்துரை ஏற்பாடுகளை செய்திருந்தார். * சித்திரபுத்திரனார் கோயில், பரமசிவன் கோயில், சுப்பிரமணிய கோயிலில், சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப்பெருமாள் அருள்பாலித்தார்.