பெருநாழி: பெருநாழி அருகே முஸ்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள இருளப்பசாமி கோயிலில் சித்திரை தமிழ் முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் கருப்பண்ணசாமி, இருளாயி, இருளப்பசாமி, காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கிடா பலியிடப்பட்டு அன்னதானம் நடந்தது.