செஞ்சி பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 06:04
செஞ்சி; தமிழ்புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.செஞ்சி காந்தி பஜார் செல்வவிநாயகர் கோவிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரம் நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் காலையில் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை சிறப்பு தீபாராதனையும் நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவில், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராம ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மேல்களவாய் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.