பழநி : பழநி கண்பத் கிராண்டில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மீனாட்சி சுந்தரம், சேஷாத்திரி ஆகியோர் பஞ்சங்கம் படித்தனர். மேலும் பிலவ ஆண்டு நாள்காட்டி, தர்ப்பண கையேட்டை மாநில தலைவர் ஹரிஹர முத்ைதயர் வெளியிட கிருஷ்ண ஜெகநாதன் பெற்றுக் கொண்டார். பழநி கிளையின் புதிய தலைவராக பாலசுப்பிரமணியன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் சர்மா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.