பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
06:04
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கொரோனா காரணமாக நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டது.
கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டு தோறும், கொடியேற்றத்துடன் துவங்கி, 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி, புலி வாகனம், சிங்க வாகனம், அன்னப்பட்சி வாகனம், கேரள ரத ஊர்வலம், சாமுண்டேஸ்வரி ரத ஊர்வலம் என, பல்வேறு சமுதாயத்தினரின் உபயத்தில் வீதி உலா நடக்கின்றன. இதில், பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு, கொரோனா, இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் உத்தரவுக்கு இணங்க, நடப்பாண்டு விழாவை ரத்து செய்ய கோவில் கமிட்டியினர், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, நேற்று காலை கோவில் வளாகத்தில் கொடியேற்றம் பட்டு, அம்மனுக்கு மலர் அலங்கார அபிஷேக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஹோமம் பஜையை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, கோவில் நடை சாற்றப்பட்டது.