பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
04:04
மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உலக நன்மை வேண்டி, சிறப்பு பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிகேம் நடைபெற்றது.தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகள், சித்தர் பீடம் வந்து, பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின், சித்தர் பீடத்தில், உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில்இருந்து மக்கள் விரைவில் விடுபடவும், சிறப்பு கலசவிளக்கு வேள்வி பூஜை,பங்காரு அடிகளார் முன்னிலையில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர்லட்சுமி பங்காரு அடிகளார்துவக்கி வைத்தார். இவ்விழாவை, காஞ்சிபுரம் மாவட்ட, ஆன்மிகஇயக்க நிர்வாகிகள் செய்தனர். முன்னதாக, தெலுங்கு வருட பிறப்பான, யுகாதி பண்டிகை, சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை, நேற்றுமுன்தினம் நடைபெற்றன.சித்தர் பீடம் வந்திருந்த,பக்தர்கள் அனைவரும், அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக கவசம், அணியவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவலியுறுத்தப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.