பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2021 10:04
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சித்திரைத் திருவிழா துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இக் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டால் நேற்று கொடியேற்றப் படாமல் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகை, சண்டிகேஸ்வரர் உட்பட பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதே போல் தினமும் பத்து நாட்களும் காலை, மாலை சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதனால் தபசு மண்டகப்படி, தேரோட்டம் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.