Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ... திருப்புத்துாரில் யோக பைரவருக்கு ஜெயந்தன் பூஜை திருப்புத்துாரில் யோக பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசேஷன் சிலைக்கு பாறை; ராட்சத லாரியில் பெங்களூரு புறப்பாடு
எழுத்தின் அளவு:
ஆதிசேஷன் சிலைக்கு பாறை; ராட்சத லாரியில் பெங்களூரு புறப்பாடு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
10:04

திருவண்ணாமலை: ஏழு தலை பாம்பு கொண்ட ஆதிசேஷன் சிலை செய்ய, 230 டன் எடையுள்ள பாறை, 138 டயர் கொண்ட -ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா, கோதண்டராம சுவாமி கோவிலில், 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட, விஸ்வரூப கேதாண்டராம சுவாமி சிலை, ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம், 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்தனர். இதற்கான பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில், மத்திய, மாநில அரசிடம், கோவில் அறக்கட்டளை சார்பில் அனுமதி பெறப்பட்டு, வெட்டி எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக, சுவாமி சிலை செய்ய, 64 அடி நீளம், 26 அடி அகலம், ஏழு அடி பருமனுடன், 380 டன் எடையுள்ள பாறை, கடந்த, 2018ல், 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, ஆதிசேஷன் சிலை செய்ய, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி பருமனுடன், 230 டன் எடையுள்ள பாறையை எடுத்து செல்லும் பணி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு தொடங்கியது. இதற்காக, 138 டயர்கள் கொண்ட கன்டெய்னர் லாரியில் பாறை ஏற்றப்பட்டது. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து, லாரியை வழியனுப்பி வைத்தனர். லாரி, தெள்ளார் வழியாக வந்தவாசி சென்றது. அங்கிருந்து, செய்யாறு, ஆற்காடு, வேலூர் கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. நாளொன்றுக்கு, 40 கி.மீ., தூரம் என கணக்கிட்டு, 10 நாட்களில் பெங்களூரு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar