திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உடையவர் என்று அழைக்கக்கூடிய ராமானுஜரின் ஜெயந்தி விழா நடந்தது.
சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் அவதரித்த தினமாகும். ஆதிஜெகநாதபெருமாள் கோயிலின் தெற்கு பிரகார சன்னதியில் உள்ள மூலவர் ராமானுஜருக்கு விசேஷத் திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாஸனித் தாயார், ஆண்டாள், பட்டாபிஷேக ராமர் தெர்ப்பசயன ராமர் ஆகிய சன்னதிகளில் உற்ஸவமூர்த்தி ராமானுஜரின் மங்களாசாசனம் நடந்தது.