பரமக்குடி: பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார். கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் ரபி அகமது, பொருளாளர் முஹம்மது உமர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். கீழ பள்ளிவாசல் இமாம் ஜமாலுதீன், சிறுவர் இல்ல இமாம் பீர்முகமது நோன்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது பொதுமக்கள் கொரோனாவில் இருந்து விடுபட மற்றும் உலக அமைதி வேண்டி தொழுகை நடத்தினர். உதவி தலைமை ஆசிரியர் புரோஸ் கான் நன்றி கூறினார்.