பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
09:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.
இதன்படி கொரோனா தொற்று பரவுதல் காரணமாக, இந்த ஆண்டு கொடியேற்றப்படாமல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 16-ல் துவங்கிய விழாவையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அப்போது பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி வருகின்றனர். மேலும் இக்கோயிலில் ஏப்., 24 அன்று திருக்கல்யாண விழா பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடக்க உள்ளது. தொடர்ந்து விழாவானது ஏப்., 27 உற்சவ சாந்தியுடன் நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், டிரஷரர் பாலமுருகன் மற்றும் டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.