காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2021 04:04
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு, உண்டியலில் சேர்ந்த காணிக்கைகளை எண்ணும் பணி சிவகங்கை உதவி ஆணையர் செல்வி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சுமதி, ஆய்வாளர் மூலலிங்கம், கணக்கர் அழகு பாண்டி ஆகியோர் முன்னிலையில், மகளிர் சேவைக் குழுவினர், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 13 லட்சத்து 51 ஆயிரத்து 698 ரூபாயும், 50 கிராம் தங்கம் மற்றும் 700 கிராம் வெள்ளியும், 10 வெளிநாட்டு நோட்டுகளும் இருந்தது.