வடமதுரை: தென்னம்பட்டியில் சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் தலைக்கட்டுதாரர்கள் சார்பில் திருவிழா நடக்கும். நடப்பாண்டிலும் திருவிழா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதையடுத்து கோயிலில் தலைவர் ஆண்டவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் வேலுசாமி, பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சித்ரா பௌர்ணமி நாளான ஏப்.26ல் விழா பந்தல் அமைத்தல், அன்னதானம் நிகழ்வுகள் ரத்து செய்வது, நேர்த்திக் கடனுக்காக மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் அன்றைய தினம் காலை 6:00 - மாலை 6:00 மணி வரை தனித்தனியே வந்து வழிபட அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் பொது பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடக்கும் என தெரிவித்தனர்.