வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும் தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும் நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத் தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே. ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து அருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.
மாலையில் பாடவேண்டியது
ராமநவமியன்று மாலையில் ராமனின் பட்டாபிஷேகப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
மங்கள கீதம் பாட மறையொலி முழங்க வல்வாய்ச் சங்கினம் குமுறப் பாண்டில் தண்ணுமை யொப்பத் தாவில் பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப் பூமழை பொழிய விண்ணோர் எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர் அபிடேகஞ் செய்தார்
மாதவர் மறைவ வாளர் மந்திரக் கிழவர் முற்று மூதறி வாளர் உள்ளஞ் சான்றவர் முதனீ ராட்டச் சோதியான மகனு மற்றைத் துணைவரும் அனுமன் தானும் தீதிலா இலங்கை வேந்தும்- பின் அபிடேகஞ் செய்தார்.
ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து. மக்களிடையே தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று ராமநவமியன்றும், மறுநாள் புனர்பூஜையிலும் ராமபிரானிடம் பிரார்த்திக்க வேண்டும்.