பவுர்ணமி பூஜை: சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு ...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2021 05:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இதன் படி ஏப்.24 அன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஏப்.25 அன்று ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள். ஏப்.26. அன்று பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 12:00 வரையும், ஏப்.27 அன்று காலை 10 மணி வரை மட்டுமே, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.