மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவம் நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று ராம நவமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. ராமநவமி உற்சவத்தை அடுத்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் கோவிலில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் ஸ்தலத்தார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாசர் ஸ்ரீதர் பட்டர், திருவேங்கடம், மற்றும் அர்ச்சகர்கள் சுவாமி முன்பு பாசுரங்களை சேவித்தனர். சாற்றுமுறைக்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.